அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் நடப்பு நிதி ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது. அதில் கோடிக்கான ஏழைகளின் உணவு மானியம் ரூ. 1 லட்சம் கோடி, விவசாயிகளின் உரம் மானியம் ரூபாய் 50 ஆயிரம் கோடி ,100 நாள் வேலைத்திட்டத்தில் ரூபாய் 29,000 கோடியும் குறைத்து வெளியிட்டுள்ள தாகவும், பி. எம் கிசான் திட்டத்திலிருந்ஊஉ 800 லட்சம் விவசாயிகளை வெளியேற்றியதாக கூறி ஒன்றிய அரசை கண்டித்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கலையரசி தலைமை தாங்கினார், சிபிஎம் மாவட்ட செயலாளர் ரமேஷ், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் செல்லதுரை, CITU தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரெங்கநாதன் உள்ளிட்ட பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்….
- by Authour
