ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் நாடாளுமன்ற முதல் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவார். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டு கூட்டம் வரும் 31ம் தேதி நடக்கும் என தெரிகிறது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வார் என தெரிகிறது. 9ம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறும்.