இந்தியாவில் முதன்முதலாக 1925- டிசம்பர் 26 இல் காண்பூரில் சிங்காரவேலர் தலைமையில் உருவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு தொடக்க நாளான 2024 டிசம்பர் 26 இன்று, அரியலூரில் கட்சி அலுவலகம் முன்பு மாவட்டத் துணைச் செயலாளர் தோழர் T,தண்டபாணி தலைமையில், ஒன்றிய செயலாளர் து.பாண்டியன் முன்னிலையில், மாவட்ட செயலாளர் சொ.ராமநாதன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டு, பின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி வரலாறு, கட்சிக்கு உள்ள சவால்களைகடந்து செல்வது, மூத்த தலைவர் தோழர், ஆர்,நல்லகண்ணு, அவர்களின் நூறாவது பிறந்தநாளில் அவரது வாழ்க்கை வரலாறு, தொழிற்சங்க போராளி தோழர் கே,டி,கே, தங்கமணி அவர்களின்
23வது நினைவு தினம் குறித்தும் வரலாறுகள் கலந்துரையாடல் நடைபெற்றதது. கூட்டத்தில் திருமானூர் ஒன்றியம் ப, கலியபெருமாள், G, ஆறுமுகம், அரியலூர் ஒன்றியம் G, மணிவேல், R, பானுமதி, கு, வனிதா, முருகேசன், தா, பழூர் ஒன்றியம் இ, முருகேசுவரி, ஜெயங்கொண்டம் ஒன்றியம் சு, மணிவண்ணன், ராஜ்குமார், காத்தவராயன், செந்துறை ஒன்றியம் K, சிவக்குமார், T, காசிநாதன், V, ராமசாமி, R, பொன்னம்மாள், R, செல்வராஜ், உட்பட திரளாக கலந்து கொண்டனர்.