Skip to content
Home » சென்சார் அதிகாரிகள் மீது லஞ்ச புகார்…..சிபிஐ அலுவலகத்தில் விஷால் ஆஜர்…

சென்சார் அதிகாரிகள் மீது லஞ்ச புகார்…..சிபிஐ அலுவலகத்தில் விஷால் ஆஜர்…

  • by Authour

இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. இது நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை இந்தி மொழியில் வெளியிட மும்பை சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது.

’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் விஷால்
’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் விஷால்

இந்த நிலையில்,மேனகா என்ற இடைத்தரகரிடம் மொத்தம் ரூ.6.5 லட்சம் பணத்தை இரு தவணைகளாக கொடுத்து ‘மார்க் ஆண்டனி’ படத்தை இந்தியில் வெளியிட்டேன் என நடிகர் விஷால் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பணம் செலுத்திய வங்கிக் கணக்கு விவரங்களையும் வெளியிட்டார் விஷால். இனி எந்த தயாரிப்பாளர்களுக்கும் இது போன்ற நிலை ஏற்படக் கூடாது என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்திய ஒளிப்பரப்புத்துறை அமைச்சர் உத்தரவிட்ட நிலையில், சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இது தொடர்பாக மும்பையில் 4 இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஷாலை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி தனது மேலாளர் ஹரிகிருஷ்ணனுடன் நடிகர் விஷால் சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளார். இதனை தனது எக்ஸ் தளத்தில் நடிகர் விஷால் உறுதி செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *