திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு அகிலாண்டேஸ்வரி கார்டன் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாபு (45). மேலூர் ரோட்டில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே நடைபயிற்சி மேற்கொண்ட போது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பாபுவை எட்டி உதைத்ததில் நிலைதடுமாறி ரோட்டில் விழுந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பிடிங்கி கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து போலீஸ் அவசர உதவி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது , சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் போலீசார்,இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வழிப்பறி திருடர்களை தேடி வருகிறார்கள்.
ஸ்ரீரங்கம் டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு
- by Authour
