தஞ்சை மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனி பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவருடைய மகன் அப்துல்வாகப் (32). இவர் சொந்தமாக கண் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் செல்போன்களை மொத்தமாக விலைக்கு வாங்கி விற்பனையும் செய்து வருகிறார்.
இவர் நேற்று இரவு ஆர் ஆர்.நகர் பகுதியில் உள்ள தனது கண்ணாடி கடைக்கு காரில் வந்தார். கடை முன்பு காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் விற்பனைக்காக காருக்குள் வைத்திருந்த 8 செல்போன்கள் உட்பட ரூ.17 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. . திருட்டு போன செல்போன்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து அப்துல்வகாப் தஞ்சை மருத்துவக்கல்லூரிபோலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோலீசார் விசாரணை நடத்தினர். திருடப்பட்ட செல்ோன்களில் 2-ல் லொக்கேஷன்(ஆன் செய்திருப்பதாக கூறப்பட்டது. அதன் மூலம் மர்மநபர்களை பின்தொடர்ந்தனர்.
பின்னர், அவர்களை திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் போலீசார் சுற்றி வளைத்தனர். விசாரணையில் அவர்கள் புங்கனூர் பகுதியை சேர்ந்த கிரிநாதன்(47), திருச்சி அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ்(38) என்பதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்த செல்போன்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.