திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த திருஈங்கோய்மலை பக்கம் உள்ள கருங்காடு என்ற பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் முத்துக்குமார்(23) பட்டதாரி. நேற்று இரவு இவர் செல்போன் பேசியபடியே அங்குள்ள மின்கம்பத்தில் சாய்ந்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. உடனடியாக அவரை முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து தொட்டியம் போலீசார் விசாரணை நடத்தினர்.