திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி பள்ளி உள்ளது. இங்கு ஆயிரம் கணக்கான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பள்ளியில் உள்ள விடுதியில் கட்டாயமாக தங்கி படிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் விதிமுறை வைத்துள்ளது. இந்நிலையில் குண்டூர் பர்மா காலனியை பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் உள்ள ஆசிரியர் வினோத் என்பவர் மாணவிகள் சிலரை கடந்த 15ம் தேதி கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த மாணவி அன்று இரவு அறையில் வைத்திருந்த 7 பாராசிட்டமல் உட்பட மேலும் சில மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் பற்றி பள்ளி நிர்வாகத்துக்கு தெரிந்ததும் வெளியில் தெரியாமல் மாணவியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சம்மந்தப்பட்ட மாணவியை அவரது பெற்றோர்கள் திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பிரண்ட் லைன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் . இச்சம்பவம் குறித்து அந்த மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் ஆசிரியர் வினோத்குமார் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்…
தற்கொலைக்கு முயன்ற திருச்சி செல்லம்மாள் பள்ளி பிளஸ் டூ மாணவி..
- by Authour