திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ். தனது குடும்பத்துடன் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தவர் ஈஷா யோகா மையம் சென்று திரும்பி வரும் பொழுது பேருந்தில் அவர் பையில் இருந்த மொபைல் போன் காணாமல் போனது. இதனால் பதறிப் போன ராஜ், மொபைலை காணவில்லை என காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் புற காவல் நிலையத்தில் பணியில் இருந்த ஹெட் கான்ஸ்டபிள் கந்தசாமி இடம் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் பேருந்தில் வந்தவர்களை இரண்டு பட்டாலியன் முத்துகிருஷ்ணன் மற்றும் மதன் ஆகியோருடன் உடனே சோதனை செய்தனர் அப்பொழுது மொபைல் போனை திருடியவன் தப்பி போடுவதை கண்ட காவல்துறையினர் ஓடிச்சென்று அவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர் இதனால் கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது காவல்துறையினரின் இந்த துரித செயலை கண்டு பயணிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்