Skip to content

தஞ்சை அருகே கழுத்தில் கத்தி வைத்து செல்போன் வழிப்பறி…. 3 பேர் கைது…

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் உடல்நிலை சரியில்லாத தனது தந்தையை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து தானும் மருத்துவக் கல்லூரிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். தஞ்சாவூர் அருகே கீழவஸ்தாச்சாவடி அருகே பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்த 3 நபர்கள் திடீரென சிறுவனின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி செல்போனை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து அந்த சிறுவன் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சிறுவனை மிரட்டி செல்போன் பறித்தது தஞ்சை விளார் ரோடு பாரதிதாசன் நகரை சேர்ந்த நந்தகுமார் (25), முருகன் (37), சுதாகர் (22) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!