அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மகன் பாபு (24) நெசவுத் தொழிலாளியான இவர் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி ரூபாய் 24 ஆயிரம் மதிப்புள்ள புதிய செல்போன் ஒன்றை மாத தவணையில் வாங்கியுள்ளார். இந்நிலையில் பாபு வாரியங்காவல் மார்க்கெட் சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது செல்போனை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் செல்போனை கண்டுபிடித்து தரக்கோரி பாபு புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் வழக்கு பதிந்து செல்போனை தேடி வந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பசும்பலூர் பகுதியைச் சேர்ந்த ஆயில் சேல்ஸ்மேனாக உள்ள செல்வகுமார் பயன்படுத்தி இருந்தது கண்டறியப்பட்டது அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கீழே கிடந்து எடுத்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து செல் போனை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் ஆகியோர் செல்போன் உரிமையாளர் பாபு இடம் அவரது செல்போனை ஒப்படைத்தனர்.