சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாநில அளவிலான சர்வதேச முதியோர் தின விழா மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன்
கலந்துகொண்டு முதியோர்களுக்கான கைபேசி செயலியை அறிமுகப்படுத்தி, முதியோர்களுக்கான புதிய கொள்கை விளக்க குறிப்பேடு வெளியிட்டு, முதியோர்களை கௌரவித்து பரிசுப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து
கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது…
பள்ளி குழந்தைகள் மூத்த குடி மக்களை பாதுகாப்பது உங்களுடைய கடமை.
தாய் தந்தை ஆனாலும் சரி, தாத்தா பாட்டியாக இருந்தாலும் சரி கூடவே வைத்துக் கொள்ள வேண்டும் என குழந்தைகளிடம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
மூத்த குடிமகனிடம் சொத்தை வாங்கும்போது சந்தோசமாக பேசி வாங்குவார்கள் அதன் பிறகு கண்டுகொள்ள மாட்டார்கள். நீங்கள் உயிரோடு இருக்கும் வரை உங்கள் சொத்தை யாருக்கும் வழங்கி விடாதீர்கள். இறந்த பிறகு யாருக்கு சேர வேண்டுமோ அவர்களுக்கு சேர்ந்து விடும்.
இந்த செயலி மூலம் மருத்துவமனை, மருந்தகங்கள் உள்ளிட்ட ஆதிவாசிய தேவைகளை வைத்துக் கொள்ளலாம்.
முதியோர் பாலிசி வெளியிட்டு இருக்கிறோம் இன்று.
முதியோர்கள் இந்த செயலில் கருத்துக்களை தெரிவிக்கலாம் மாற்றி அமைக்கப்படும்.
முதியோர்களை நாம் பாதுகாக்க வேண்டும் அதற்கு நாம் அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும்.
சமூக நலத்துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் 38 யாசகம் கேட்கும் குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியருக்கும் சமூக நலத்துறை அலுவலருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.