சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவருக்கு சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் நிச்சயம் செய்யப்பட்ட பெண், சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்பட பாணியில் அரவிந்த்துடன் செல்போனை மாற்றிக்கொண்டுள்ளார்.
அப்போது, நிர்வாண முறையில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் வீடியோ காலில் அரவிந்த் இருந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் திருமண நிச்சயிக்கப்பட்ட பெண் தெரிவித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அரவிந்தை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.