தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து கொண்டிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12 சிறைச்சாலைகளில் கேமரா பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கேமரா பொருத்தும் பணி நடைபெறும் எனவும், சிறைக்காவலர்களின் உடைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.