தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ் செயல்டும் 12 மற்றும் 10 ம் வகுப்புகளுக்கு ரிசல்ட் தேதி வருகிற 6 மற்றும் 10 ம் தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளின் 10, 12ம் வகுப்புகளுக்கான ரிசல்ட் தேதி என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதை மத்திய கல்வி வாரியம் மறுத்துள்ளது. இந்த மாதத்தில் ரிசல்ட் வெளியாகும். ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
