மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும், தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் இந்த தேர்வினை எழுதினர். இன்று காலை 10 மணி அளவில் சிபிஎஸ்சி ரிசல்ட் வெளியானது.
சி.பி.எஸ்.இ. பிளஸ்2 ரிசல்ட் வெளியான சிறிது நேரத்தில் சிபிஎ1்சி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசலட்டும் வெளியானது. இதில் மொத்தம் 93.60 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 22.38 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 20.95 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலாக 0.46 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.