கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அதிமுக சார்பில் அதன் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி இன்பதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஐகோர்ட் அறிவித்துள்ளது.
