நாகை மாவட்டம் நாகூரில் சிபிசிஎல் எண்ணெய் நிறுவனம் கடலில் பதித்துள்ள குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்து உள்ளது. கச்சா எண்ணெய் அதிக அளவில் கடலில் கலந்துள்ளதால், நாகூரில் உள்ள மீனவ கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீன்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.