எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை நடந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் 2022ம் ஆண்டு முதல் இந்த கொலை, கொள்ளை குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கோடநாடு சம்பவம் நடந்தபோது, எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் வீரபெருமாள் . முன்னதாக அவர் ஜெயலலிதாவிடமும் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். அவரையும் இந்த விசாரணையில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
அதன்படி கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வீரபெருமாள் இன்று காலை விசாரணைக்கு ஆஜரானார்.சில தினங்களுக்கு முன்பு கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுவரை சிபிசிஐடி போலீசார் 250 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.