Skip to content

காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு தர வேண்டும்… நடிகை ராதிகா சரத்குமார்..

  • by Authour

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் தனியார் கண் மருத்துவமனையை நடிகை ராதிகா சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து
விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் பேசியதாவது

இணையத்தில் தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து கண் தானம், உடல் உறுப்பு தானம் போன்ற நல்ல விஷயங்களை இணையதளம் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். திரைப்படங்களில் சிகரெட் பிடித்தல் காட்சிகள் தொடர்பாக அந்தந்த மாநில அரசு கூறும் அறிவுரைகள் பின்பற்றப்படுகிறது.

கோவைக்கும் எனக்கும் எப்போதும் ஒரு நல்ல உறவு உள்ளது.

சின்ன வயதில் என் தந்தையுடன் வந்த அனுபவம் உள்ளது. இங்குள்ள பலருடன் நெருங்கிய உறவு உள்ளது. அவர்களை போனில் தான் தொடர்பு கொள்ள முடிகிறது. அவர்களை இதுவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

கர்நாடகத்தில் நடிகர் சித்தார்த்க்கு நடந்த சம்பவம் குறித்து எனக்கு தகவல் தெரியவில்லை.

காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனை அமல் படுத்த வேண்டும்.

கோவையில் சினிமா துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

சினிமா துறையில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும். திரைப்படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் தற்போது குறைவாக இல்லை.

அந்த காலத்தில் தொடாமல் பேசினர்.

இப்போது காலத்திற்கு ஏற்ப அந்த நிலை மாறியுள்ளது. இப்போது வித்தியாசமான கதைகள் வருகிறது.

இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. என் சந்திரமுகி- 2 தற்போது திரைக்கு வந்துள்ளது.

அடுத்து துருவ நட்சத்திரம் திரைப்படம் வர உள்ளது. தவிர, சீரியல், வெப்சீரிஸ்கள் நிறைய செய்கிறேன்.
டிஜிட்டலுக்கு தரமான தயாரிப்பாளர்களை விரும்புகிறேன். அந்த பிளாட்பார்ம்-க்கு நானும், என் கணவரும் மீண்டும் கொண்டு வந்து உள்ளோம். பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு ரொம்ப வருடம் பேசப்பட்டது. தற்போது அமல் படுத்தப்பட்டது.
அதனை சரியாக செயல்படுத்த வேண்டும். அதற்கு நீண்ட காலம் எடுக்காம். அம்மி கல் தள்ளி கொண்டே இருந்தால் தான் நகரும். அதுபோல நாமும் இந்த விஷயத்தில் தொடர்ந்து செயல்பட வேண்டும். தற்போது ஆன்லைன் விமர்சகர்கள் வந்துள்ளனர்.
அவர்களை தவிர்க்க முடியாது. அவர்கள் அதை வைத்து தான் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களை நிறுத்த கூற முடியாது.‌

நாம் தான் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *