தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரைத்தராமல் கர்நாடகம் வரம்பு மீறி செயல்படுவது குறித்து தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. உச்சநீதிமன்றம், ஆணையம் உத்தரவிட்டும் அதன்படி செயல்படாமல் கர்நாடகம் இருக்கிறது.
இந்த நிலையில் டில்லியில் இன்று காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடந்தது. காணொளி மூலம் அவர் கூட்டத்தை நடத்தினார். அப்போது தமிழகத்தின் சார்பில், வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனைக்கேட்ட ஒழுங்காற்றுக்குழு வரும் 16ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது.
பலமுறை அதே போல ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டும், அதை கர்நாடகம் செயல்படுத்தவில்லை. இப்போதும் அதே போல செயல்படுத்த மறுக்கும் என்றே தெரிகிறது.