தமிழ்நாட்டின் காவிரி அற்றின் நீர் உரிமையை மறுக்கும் விதமாக ஒன்றிய அரசும் கர்நாடக அரசும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 206 டி.எம்.சி நீரையும் கடந்த ஆண்டு வழங்க மறுத்த கர்நாடக அரச கடந்த ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையம் மாதாந்திரக் கூட்டத்தில் விதித்த உத்தரவுகளையும் தென்மேற்குப் பருவமழையைக் காரணம் காட்டி குருவை சாகுபடிக்கும் சம்பா சாகுடிபடிக்கும் நீர் திறந்துவிட விட்டது.
கர்நாடக அணைகள் அனைத்தும் நிரம்பிய பின்னர் வழிந்த உபரி நீரை மட்டுமே கர்நாடக அரசு திறந்துவிட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிகக் கடுமையாகச் சரிந்து குடியிருக்க தட்டுப்பாடு ஏற்படக்கூடிய தமிழகத்தில் நிலவுகின்றது.
இந்நிலையில் கடந்த 01.02.2024 அன்று நடைபெற்ற காவிரி மேலாண்மையை வாரியக்கூட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் இணைக்கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் அதிகாரிகள் ஒப்புதல் அளித்து ஒன்றிய நீராற்றல் அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களுக்கான குடிநீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் விளங்குகின்ற காவிரி ஆற்றின் மீதான தமிழருக்குள்ள நீர் உரிமையை நிரந்தரமாகப் பறிக்கும் விதமாக காவிரி ஆற்றின் குறுக்கே மேக தாதுவில் இணைக்கட்ட காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
தமிழக மக்களின் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு விரைந்து செயல்பட்டு சட்ட நடவடிக்கையாக உச்சநீதிமன்றத்தை நாடி காவிரி மேலாண்மை வாரியம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய ஆவண செய்ய வேண்டும். மேலும் ஜனநாயக நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடையடைப்பு அறிவிக்க வேண்டும் எனவும் திருச்சி மாவட்ட சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
எங்களது கோரிக்கையை தமிழக அரசுக்கு கொண்டு சேர்க்க வேண்டுமாய் மாவட்ட ஆட்சியர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம் என சாமானிய மக்கள் நல கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.