ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு கொண்டாடுகிறார்கள். நாளை 03.08.23 ஆடிப்பெருக்கு என்பதால் காலையிலேயே குடும்பம் குடும்பமாக மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று காவிரி அன்னையை வழிபடுவார்கள். புதுமணத்தம்பதிகள், தங்கள் திருமணத்தின்போது அணிந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு புதிதாக தாலிப்பெருக்கு சடங்கு நடத்துவார்கள். இளம்பெண்கள், வாலிபர்கள் விரைவில் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி மஞ்சள் கயிறு அணிந்து கொள்வார்கள். காவிரி அன்னையை
வழிபடுவருவார்கள் பிளாஸ்டிக் பைகளுடன் வந்து வழிபட்டு, பைகளை, மாலைகளை, பழைய துணிகளை ஆற்றில் விட்டு மாசுபடாமல் தடுக்க வேண்டும் என மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்தை தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.