காவிரி யில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு 177.25 கனஅடி தண்ணீரை கர்நாடகம் தரவேண்டும். இந்த ஆண்டு கர்நாடகத்தில் போதுமான மழை இல்லை என்று கூறி தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுத்து விட்டது. இந்த நிலையில் இன்று டில்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் அதன் தலைவர் ஹல்தர் தலைமையில் நடந்தது.இதில் தமிழகத்தின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா கலந்து கொண்டு, தமிழகத்திற்கு உாிய தண்ணீரை திறக்க உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தினார். அதனை ஏற்றுக்கொண்ட ஆணையம், தமிழகத்திற்கு வரும் 23ம் தேதி வரை கர்நாடகம், வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் விட வேண்டும் என உத்தரவிட்டது.