டில்லியில் இன்று மதியம் காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம் கூடியது. கூட்டத்துக்கு தலைவர் ஹல்தர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு சார்பில் இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை செயலாளர் சக்சேனா கலந்து கொண்டார். அவர் வினாடிக்கு 12,500 கனஅடி வீதம் 15நாட்களுக்கு திறக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதை கர்நாடகம் ஏற்கவில்லை. கர்நாடகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கூறினர்.
