Skip to content
Home » காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…. தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்குமா?

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…. தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்குமா?

  • by Senthil

காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 21 கூட்டங்கள் நடந்துள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தலைநகர் டில்லியில் இன்று (வெள்ளிக்கிழமை)    பிற்பகல் நடக்கிறது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.  தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு முறைப்படி வழங்காததால், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டில்லி சென்று, மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தார். அப்போது தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கடிதத்தையும் அளித்தார். இதனால் கர்நாடக அரசுக்கு அழுத்தம் தரப்பட்டது. அதன்பேரில் தண்ணீர் திறந்து விடுவதாக கர்நாடக துணை முதல் மந்திரி சிவகுமார் தெரிவித்தார்.  இதற்கிடையே மழையும் பெய்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனாலும் தமிழகத்திற்க தரவேண்டிய தண்ணீர் வரவில்லை. இதனை இன்று நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தண்ணீர் பிரச்னையை எழுப்பும் என்பதால், அதனை சாக்குபோக்கு சொல்லி சமாளிக்க கடந்த சில தினங்களாக  கர்நாடக அரசு கர்நாடக அணைகளில் இருந்து ஓரளவு தண்ணீர் திறந்து விட்டு உள்ளது. ஆனாலும் இன்றைய நிலவரப்படி 40 டிஎம்சிக்கும் மேல் தண்ணீர் தரவேண்டியது நிலுவையில் உள்ளது. அந்த தண்ணீரை உடனே தர ஆணையம் உத்தரவிடுமா என்ற எதிர்பார்ப்பு தமிழகம் தரப்பில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!