கரூர் – திண்டுக்கல் சாலையில் கரூரை அடுத்த வெள்ளியணை கடைவீதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் சென்றது. வாங்கல் காவிரி ஆற்றிலிருந்து திண்டுக்கல் பகுதி மக்களுக்கு குடிநீருக்காக செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் சாலையோரத்தில் செல்லும் போது அப்பகுதியில்
மண்ணில் புதைக்கப்பட்டுள்ள குழாய்கள் உடைப்பு அடிக்கடி ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த வகையில் இன்று காலையில் ஏற்பட்ட கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக காவிரி ஆற்றுத் தண்ணீர் சாலையில் வழிந்தோடியது. அதனை பார்த்த பொதுமக்கள் காவிரி ஆற்றில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் அவை நிறுத்தப்பட்டு, அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
