காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு அக்டோபர் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை தினமும் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு அதன்படி திறக்கவில்லை.
இந்த நிலையில் வரும் 30ம் தேதி டில்லியில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொளி மூலம் நடக்கிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், புதுவை மாநில பிரதிநிதிகள் கலந்து கொள்ளும்படியும் வினீத் குப்தா கேட்டுக்கொண்டுள்ளார். இதில் கர்நாடகம் தரவேண்டிய தண்ணீரை தந்ததா, அடுத்த மாதம் எவ்வளவு தண்ணீர் தர வேண்டும் என்பது குறித்து ஒழுங்காற்றுக்குழுவில் ஆய்வு செய்யப்படும் என தெரிகிறது.