திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக் கோவிலை இணைக்கும் பாலமாகவும் திருச்சியின் அடையாளமாய் திகழும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை, மாலை வேளகைளில் திருச்சியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பாலத்தின் பராமரிப்பு வேலைகள் மந்தகதியில் நடப்பதாகவும், அதை துரிதப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவிடம் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் அமைச்சர் நேரு இன்று காலை காவிரி பாலத்தில் பணிகள் நடப்பதை நேரில் ஆய்வு செய்தார். பாலப்பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அமைச்சருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன்,நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, உதவி கோட்ட பொறியாளர் புகழேந்தி மற்றும் அரசு அலுவலர்கள் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர்.