நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு இன்று உறையூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், திருச்சி காவிரி பாலத்தில் பழுது நீக்கும் பணி நடந்து வருவது பற்றியும், அந்த பணி எப்போது முடிந்து பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்படும் என பத்திரிகையாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு, பாலத்தில் பழுது நீக்கும் பணி முடிவடைந்து விட்டது. தார் போடும் பணி நடக்கிறது. தார் காய்ந்ததும் வரும் மார்ச் 1ம் தேதியில் இருந்து 3ம் தேதிக்குள் பாலம் திறக்கப்படும் என்றார்.
இந்த பாலம் திறக்கப்பட்டால் திருச்சி மாநகரில் இருந்து திருவானைக்காவல், திருவரங்கம், நம்பர் 1 டோல்கேட் போன்ற இடங்களுக்கு செல்லும் பஸ்கள் நேரடியாக காவிரி பாலம் வழியாக செல்லும். தற்போது பைபாஸ் வழியாக பஸ்கள் செல்வதால் காலவிரயம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.