மயிலாடுதுறையில் உள்ள புகழ்பெற்ற துலாக்கட்ட காவிரியில் வழுவிழந்து காணப்பட்ட தென்கரையின் பக்கவாட்டு சுவர் மழையின் காரணமாக மண்அறிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்ததால் சாலையில் விரிசல். வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்வதால் உடனடியாக கரையை பலபடுத்தி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை:-
மயிலாடுதுறை நகரின் மையப் பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது. இந்தக் காவிரி ஆற்றில் கங்கை முதலான புண்ணிய நதிகள் துலா மாதமான ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டதாக புராணம் கூறுகிறது.. இதனை போற்றும் வகையில் ஆண்டுதோறும் துலாமாதம் முழுவதும் காவிரி ஆற்றில் சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி இங்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
இதனால் இந்த பகுதி காவிரி துலாக் கட்டம் என்று அழைக்கப்படுகிறது. காசிக்கு இணையாக கருதப்படும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தென்கரையில் உள்ள காவிரி கரையோரப்பகுதி போதிய பராமரிப்பின்றி வலுவிழந்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் தென்கரையில் உள்ள படித்துறையின் பக்கவாட்டு சுவர் ஒரு பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்தது.
இருசக்கர வாகனங்கள், ஆட்டோ சென்றுவரும் சாலையின் அடிப்பகுதியில் மண்சரிவினால் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் சாலை எப்போழுது வேண்டுமானாலும் சரிந்து விழும்அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வழியாக செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள், மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து சென்று வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்தினர் அந்த பாதையை தடை செய்யாமல் இடிந்து விழுந்த பகுதியில் கயிறு கட்டி வைத்துள்ளனர். உடனடியாக விபத்து ஏற்படுவதற்குமுன் காவிரியின். கரையை பலப்படுத்தி புகழ்பெற்ற காவிரி துலா கட்டத்தை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.