கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள புங்கொடை காவேரி ஆற்றில் நாமக்கல் மாவட்டம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (32) இவர் நாமக்கல் பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கில் சப்ளரியாக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மார்க் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஜெகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் 15 பேருடன் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்
அப்பொழுது அனைவரும் குளித்து கொண்டிருந்தபோது ஜெகநாதன் மட்டும் ஆழமான பகுதியில் குளித்து கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார்.
இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று கரூர் மாவட்டம் புங்கொடை காவிரி ஆற்றின் அருகே அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புகலூர் தீயணைப்பு துறையினர் காவிரி ஆற்றிற்குள் சென்று ஐந்து நாட்களுக்குப் முன்பு நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன ஜெகநாதன் என்பது உடல் என்பதை உறுதிப்படுத்தினர்.
மேலும் காவிரி ஆற்றில் அதே பகுதியில் 200 மீட்டர் தொலைவில் அடையாளம் தெரியாதா 25 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவரின் உடலும் புங்கொடை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் ஆண் பெண் இரண்டு உடல்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.