அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் வனம் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் சென்னை பெருங்களத்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு ஒருவரிடம் ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, கடந்த 2015-16 காலகட்டத்தில் பிரபல நிறுவனத்தின் 57.94 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு வைத்திலிங்கம் ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில் வைத்திலிங்கம் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வைத்திலிங்கம், அவரது மகன்கள், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது இந்த வழக்குப்பதிவு செய்துள்ள தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.