Skip to content
Home » பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட டிரைவர் மீது வழக்குப்பதிவு…

பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட டிரைவர் மீது வழக்குப்பதிவு…

திருச்சி மாவட்டம் , நவல்பட்டு கிராமம் துப்பாக்கி தொழிற்சாலையின் வளாகத்திற்குள் உள்ள கேந்திர வித்யாலயா எண்:1 பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் குண்டூர் எம் ஐ டி பகுதியை சேர்ந்த (**) என்ற மாணவர் மற்றும் மாத்தூர் டெபோடெல் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வரும் அவரது தம்பி (**) ஆகிய இருவரையும் ராஜேஷ் கண்ணா (53),  அண்ணா நகர், நவல்பட்டு, திருச்சி என்பவரது ஆம்னி வேன் மூலம் வழக்கமாக பள்ளிக்கு கொண்டு விடுவதும் அழைத்துச் செல்வதுமாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று (06.11.2024) மாலை பள்ளியில் இருந்து மேற்படி ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவரை அழைத்துக் கொண்டு வீட்டில் விட்டுவிட்டு திரும்ப மாத்தூரில் டியூஷனுக்கு அழைத்துச் செல்ல வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தவர் வழக்கத்திற்கு மாறாக குண்டூர் நூறு அடி சாலை ஐயன்புத்தூர் கிராமம் அருகில் உள்ள ஒரு இடத்தில் அவரது வண்டியிலேயே வைத்து தவறாக நடந்துள்ளார். இது தொடர்பாக மேற்படி மாணவர் அவரது பெற்றோரிடம் கூறியதின்படி அவரது தம்பியையும் விசாரணை செய்த பொழுது மேற்படி ராஜேஷ் கண்ணா அவரது தம்பியிடமும் தவறாக நடந்து வந்துள்ளார் என்று கூறியுள்ளார். இது சம்பந்தமாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் நிலை மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!