திருச்சி, தென்னுார் பாலன் நகரைச் சேர்ந்தவர் சகாய பிரதாப் (43), சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவரை சரித்திர பதிவேடு ரவுடிகளான எ.புதுார், நல்லகேணி தெருவைச் சேர்ந்த பிரதாப் (41), கொல்லங்குளம் பாரதிநகரைச் சேர்ந்த அபுதாகீர் (36) மற்றும் இப்ராகிம் (40) ஆகிய 3 பேர் எ.புதுார், அரசு காலனி அருகே அழைத்து வந்து கட்டையால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சகாய பிரதாப் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சகாய பிரதாப் அளித்த புகாரின் பேரில் எ.புதுார் போலீசார் மூன்று ரவுடிகள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாலிபரை தாக்கிய 3 ரவுடிகள் மீது வழக்குப்பதிவு… திருச்சியில் பரபரப்பு..
- by Authour
