திருச்சி – சென்னை நெடுஞ்சாலை, தா கூர் தெரு சேவைச்சாலை அருகே லோடு வாகனத்தில் மணல் அள்ளப்படுவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு உரிய அனுமதி மற்றும் சரியான ஆவணங்களின்றி மணல் அள்ளியதாக திருவானைக்கோயில், நடுகொண்டயம்பேட்டை கரிகாலன் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (38) என்பவரை திருவரங்கம் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய லோடு வாகனம் மற்றும் 7 ஆயிரம் மதிப்புள்ள 1 யூனிட் மணல் போவலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் திருச்சி சென்னை – நெடுஞ்சாலை ஜே.பி குடியிருப்பு பகுதி அருகே உரிய ஆவணங்கலின்றி மணல் அள்ளிய ஜெயகரன் மற்றும் கருணாநிதி ஆகிய 2 பேர் மீது திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.