மர்மநபர்களால் ஆம்ஸ்ட்ராங், வெட்டி கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிந்து 8 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய கோரி மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டது. உரிய அனுமதி தரப்படவில்லை என கூறப்படுகிறது. இதை எதிர்த்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக இன்று இரவே விசாரணைக்கு ஏற்க கோரப்பட்டது. . நீதிபதி அனிதா சுமந்த், நாளை (ஜூலை 07) காலை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்துவதாக அறிவித்தார். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி பவானி சுப்பபுராயன் முன்னிலையில் இன்று காலை 8.30 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளது.