Skip to content

ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு… மணல் கடத்தல்… வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சி ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு பதிவு

திருச்சி கோட்டை போலீஸ் சரகம் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வணிக சிலிண்டரை பயன்படுத்தாமல் வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கோட்டை போலீஸ் எஸ்ஐ திவ்யபிரியா தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர் .சோதனை முடிவில் வீட்டு சிலிண்டர் பயன்படுத்தியது உறுதியானது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் முகமது உசேன் என்பவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஓட்டலில் இருந்து இரண்டு வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது,

ஆற்றில் மணல் கடத்தியதாக வாலிபர் கைது 

திருச்சி கீழ கொண்டயம்பேட்டை பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது .இதையடுத்து திருவரங்கம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராம் சிங் தலைமையிலான போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது பொலிரோ வாகனத்தில் மணல் கடத்தியதை மடக்கிப் பிடித்தனர் .இது தொடர்பாக பிரேம்குமார் என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஜேசிபி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விஷம் குடித்து முதியவர் சாவு… 

திருச்சி சங்கிலியாண்டபுரம் கோவிந்த கோனார் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (60 ).இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ,அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் விரக்தி அடைந்த நிலையில் இருந்த அவர் விஷம் குடித்தார். உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் வழக்குப்பதிந்து மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!