அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமா 3 தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருடன் பங்கேற்ற கேரம் வீராங்கனைகள் நாக ஜோதி, மித்ரா ஆகியோரும் தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர். ஆனால், எளிய பின்னணியில் உள்ள கேரம் வீரர்களுக்கு தமிழக அரசு இதுவரை எந்த நிதியுதவியும் அறிவிக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் கேரம் விளையாட்டு வீராங்கனை காசிமாவிடம் ரூ.1 கோடிக்கான காசோலையயை துணை முதல்வர் உதயநிதி அரசு சார்பில் வழங்கினார். அதுபோல் இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்கம் வென்ற மித்ராவுக்கு ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.