இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவர் செரியன், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 82. மருத்துவர் செரியன், குழந்தைகள் இதய அறுவை சிகிச்சையில் முன்னோடியாக திகழ்ந்தார்.
இந்தியாவில் யாருமே செய்யாத அரிய சாதனையாக ஏற்கெனவே மூளைச் சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து இதயத்தை எடுத்து அதனை இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நபருக்கு வெற்றிகரமாக பொருத்தி வெற்றி கரமாக அறுவை சிகிச்சை செய்தார்.
1942 ம் ஆண்டு மார்ச் 8 ம் தேதி கேரள மாநிலம் கோட்டுரத்து வீட்டில் மம்மன் என்பவருக்கு செரியன் பிறந்தார். தமிழ் நாட்டில் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் சென்னை ரயில்வே மருத்துவமனையில் பணியில் சோ்ந்தார். அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்க நாடுகளுக்கு குடிபெயா்ந்தார்.
செரியன் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது இறுதிச்சடங்கு வரும் வியாழக்கிழமை நடைபெறும் என்று அவரது மகள் சந்தியா செரியன் தெரிவித்துள்ளார். செரியனின் சேவையை பாராட்டி அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி உள்ளது. இவர் ஜனாதிபதிகள் சங்கர் தயாள் சர்மா, ஆா். வெங்கட்ராமன் ஆகியோரின் மருத்துவ ஆலோசகராக இருந்தார்.