பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா சித்தளி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் நல்லசாமி – இவர் பெரம்பலூர் 4 ரோடு அருகே தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 9 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் அடிக்கடி மது அருந்துவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவர் கடந்த 26 ஆம் தேதிவீட்டை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நல்லசாமி கீழப்புலியூர் கிராமத்தில் காரில் அமர்ந்து மது அருந்தி அப்படியே இறந்தது கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மங்கள் மேடு போலீசார் நல்லசாமியின் உடலை பிரே பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.