கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள மலையம்பாளைய பகுதியில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து கரூருக்கு இரண்டு குழந்தை இரண்டு பெண்கள் ஒரு ஆண் என ஐந்து நபர்கள் காரில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலை ஓரம் இருந்த தடுப்புக்கல் மீது மோதி 6 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணித்த பெண் பலத்த காயம் அடைந்துள்ளார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் காரில்
இடுபாடுகளில் சிக்கிய நபர்களை மீட்டனர். இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காரில் பயணித்த மூன்று நபர்கள் லேசான காயங்களுடன் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.