Skip to content

காரும் டிராக்டரும் மோதி விபத்து…. 4 மருத்துவ கல்லூரி மாணவர்கள் பலி…

திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி 4 பேர், காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது பென்னாத்தூர் பகுதியில் சென்ற போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டரின் மீது அதிவேகத்தில் கார் மோதியது. பின்னர், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்பென்னாத்தூர் போலீஸார், 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்..

மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் பதிவெண் கொண்ட இந்த காரில் பயணித்தவர்கள், 4 பேரும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதிகாலை 3 மணிக்கு நடந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *