தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே இருகரை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (40). விவசாயி. இவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்த உறவினர் உடலை பார்ப்பதற்காகத் தனது சித்தப்பா மகன் பிரபுவுடன் நேற்று மாலை பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.
தஞ்சாவூர் -திருச்சி சாலையில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் கதவு திடீரென திறக்கப்பட்டது. இதில் கோவிந்தராஜன் மீது கார் கதவு மோதியதால், அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த தனியார் பஸ் பின் சக்கரத்தில் கோவிந்தராஜன் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தஞ்சாவூர் நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்