சர்வதேச அளவில் நடைபெறும் கார்கள் விற்பனை நிலவரம் குறித்த அறிக்கையை நிக்கெய் ஏசியா என்ற நிறுவனம் வெளியிட்டது. அதன்படி .. 2021-ம் ஆண்டு நிலவரத்தின்படி, சீனாவில் 2.6 கோடி கார்கள் விற்பனை ஆகியுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. அதே சமயம் அமெரிக்கா 1.5 கோடி கார்களை விற்பனை செய்து 2-வது இடத்திலும், 44 லட்சம் கார்களை விற்பனை செய்து ஜப்பான் 3-வது இடத்திலும் இருந்தது.
இந்நிலையில் 2022ம் ஆண்டு புள்ளிவிபரத்தின்படி சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கார்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக நிக்கெய் ஏசியாவின் கணித்துள்ளது. ஜப்பானில் கடந்த 2022-ம் ஆண்டு கார் விற்பனை 42 லட்சமாக குறைந்தது. அதே சமயம் இந்தியாவில் 42.5 லட்சம் கார்கள் விற்பனை ஆகியுள்ளது. அதன் மூலம் 2022 ஆண்டில், ஐப்பானைவிட கூடுதலாக 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்து இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. பெட்ரோல், டீசல் கார்களே அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளதாகவும், மின்சார கார்களின் விற்பனை ஒப்பிட்டளவில் மிக குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.