கர்நாடக மாநிலம் பெங்களூர் சில்க் போர்டு பகுதியைச் சேர்ந்த முகமது ஜாகிர் மகன் நிஷார் இவர் சவுதி அரேபியன் என்ற பெயரில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு சானியா என்ற பெண்ணுடன் திருமணமாகி மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் இன்று சானியாவின் அக்கா வீடு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ளது அவரை பார்க்க குடும்பத்தினருடன் நிசார் தன்னுடைய சொகுசு காரில் வந்துள்ளார். அப்போது நாட்றம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென
பின்பக்க டயர் கழண்டு ஓடிள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சானியாவிற்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது இதனால் அவரை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் அறிந்த தேசிய நெடுஞ்சாலை துறையினர் காரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் மேலும் இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.