சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூலில் சாதனை புரிந்தது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினிக்கு இன்று ஒரு சர்ப்ரைஸ் அளித்தார். அதாவது விலை உயர்ந்த பரிசாக பிஎம்டபுள்யு x7 காரை கலாநிதி மாறன், ரஜினி வீட்டுக்கே சென்று இன்று வழங்கினார்.
ரஜினிக்கு என்ன கார் பரிசளிக்கலாம் என கருதிய கலாநிதி மாறன், இது தொடர்பாக பல்வேறு கார்களின் மாடல்களை ரஜினியிடம் காட்டினார். அவர் விரும்பிய பிஎம்டபுள்யு X7 காரை பரிசாக அளித்தார். பரிசினை பெற்றுக்கொண்ட ரஜினி, கலாநிதி மாறனுக்கு நன்றி தெரிவித்தார்.