108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறும்
இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா கடந்த 26ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது – ஸ்ரீராமர் பிறந்த புனர்பூச நட்சத்திரத்தில் இந்த தேரோட்டம் வருடம் தோறும் தை மாதத்தில் நடைபெறுவது மிகவும் விஷேசமானது.
இதையொட்டி தினசரி நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்விழாவின் முக்கிய நிகழ்வான தைத் தேரோட்டம் இன்று தொடங்கியது இதற்காக அதிகாலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தைத் தேர் மண்டபம் வந்தடைந்தார், பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தேரில் எழுந்தருளிய நம்பெருமாளை பெரும் திரளான பக்தர்கள் ரங்கா ரங்கா கோவிந்தா என கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்…தேரோட்டத்தில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசித்தனர்.