கோயம்புத்தூர் வேடப்பட்டியை சேர்ந்தவர் ஜெகன்ராஜ் (33). கார் ஓட்டுநர். இவர் தனது செல்போனை அதே பகுதியை சேர்ந்த மதன்ராஜ் (32) என்பவரிடம் அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளார். பின்னர் மீண்டும் பணத்தை கொடுத்துவிட்டு செல்போனை வாங்கச் சென்ற போது, மதன்ராஜ் போனை கொடுக்காமல், ஜெகன்ராஜூடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவரும் வடவள்ளி டாஸ்மாக் பின்புறம் உள்ள மயானத்திற்கு சென்று அப்போதும் ஏற்பட்ட தகராறில் மதன்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஓட்டுநர் ஜெகன்ராஜை குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவானார். வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து இரவு முழுவதும் சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து, தடயங்களை வைத்து, கொலை செய்த மதன்ராஜை அதிகாலையில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.