திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து நன்னிலம் பகுதியில் நடைபெறும் நிச்சயதார்த்த விழாவிற்கு செல்வதற்காக டவேரா காரில் 13 பேர் இன்று அதிகாலை பயணம் செய்து கொண்டிருந்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் வந்தபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் காரில் பயணம் செய்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்சில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.